அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பகுதி நேர கற்கை நெறிகளுக்காக புதிய பயிலுனர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தொழில் பயிற்சி கற்கை நெறிகளாக அடிப்படை மோட்டார் சைக்கிள் பராமரிப்பு, கையடக்க தொலைபேசி பழுது பார்த்தல், அடிப்படை ஹோட்டல் தொழிற்பாடு ஆகிய கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அதேபோன்று மொழி பயிற்சி கற்கை நெறிகளாக ஜப்பான் மொழி, கொரியன் மொழி, அடிப்படை ஆங்கிலம், இரண்டாம் மொழி சிங்களம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன. இக்கற்கை நெறிகள் வார இறுதி நாட்களில் நடைபெறும். இக்கற்கை நெறிகளை தொடர வயது எல்லை கிடையாது.
100 வீதம் செயன்முறை ரீதியான கல்வியே இங்கு வழங்கப்படும். அத்துடன் பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் பயிற்சிநெறி தொடர்பான மேலதிக விளக்கங்களுக்கு வதிவிட முகாமையாளர், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் 051 2223492, 051 2222762 போன்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் வதிவிட முகாமையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தலவாக்கலை பி.கேதீஸ்