பண்டாரவளையில் மூன்று மாணவிகளின் அரங்கேற்றம் ஒரே மேடையில் இன்று

0
584

இசைக்கலைமாணி, அருட்கலாதிலகம், கலாபிமாணி, கலாபூஷணம் கலாநிதி சர்மினி ராமநாதனின் மலையக இந்திய நுண்கலைப் பீடம் வழங்கும் மூன்று மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் இன்று 16ஆம் திகதி பண்டாரவளையில் இடம்பெறவுள்ளது.

யுவகலா பாரதி, நாட்டியச்சாரி நர்த்தன வித்தகி ஶ்ரீமதி லலிதனின் மாணவிகளான சுதர்சனா அசோகன், துவாரகா குணரட்ணம், லிதுசாலினி திகனேஸ்வரன் சர்மா ஆகியோரின் அரங்கேற்றமே இன்று பண்டாரவளை நகர மண்டபத்தில் ஒரு மணிமுதல் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி உசாநந்தி துரைசிங்கம் ,சிறப்பு அதிதிகள், பெற்றோர்கள் கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here