இன்று முதல் ஜனாதிபதியை அழைப்பதற்கு அதிமேதகு தடை செய்யப்படும் என தெரிவித்துள்ள பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க ஜனாதிபதி கொடி ஒழிக்கப்பட்டு நாட்டுக்கு தேவை தேசியக்கொடி மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்று பதில் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்தன் பின்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விஷேட உரையிலேயெ அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் மீது சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பை மீறும் எந்தவொரு செயலுக்கும் இடமளிக்கப் போவதில்லை. நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். உணவு, மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் வீழ்ச்சியுறவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும். எதிர்காலத்தில் உள்ள ஆபத்தான சூழ்நிலையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் தங்கள் இலட்சியங்களை ஒதுக்கிவிட்டு நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். தனிநபர்களைப் பாதுகாப்பதை விட, நாட்டைப் பாதுகாப்பது அவசியம்.
நாட்டில் சட்டத்தையும் அமைதியையும் பேணுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அமைதியான போராட்டங்கள் ஏற்கப்படுகின்றன, இருப்பினும், நாசகார வேலைகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர். புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் கூடும் போது அழுத்தங்களை பிரயோகிக்க சிலர் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது
நாட்டில் வன்முறையைத் தூண்டும் முயற்சியில் பாசிசக் குழுக்கள் உள்ளன. இதுபோன்ற குழுக்களில் உள்ளவர்களே அண்மையில் இராணுவ வீரர்களிடம் இருந்து ஆயுதங்களை பறித்து சென்றன. இதில் 24 படையினர் காயமடைந்துள்ளனர், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.