தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்துக்கான பதிவு (QR) முறைமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தின் முறைமை மேம்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த 48 மணி நேரமாக தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்துக்கான புதிய பதிவுகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.