பதுளையில் ஸ்ரீ ராஜ நர்த்தனாலயத்தின் பரதநாட்டிய  ஆதாரம் ஆடலரங்கம் கலை நிகழ்ச்சி –

0
401
பதுளை மாநகரில் சைமன் பீரிஸ் மண்டபத்தில் ஸ்ரீ ராஜநர்தனாலய அதிபர் நுண்கலைமானி கலா வித்தகர் நாட்டிய சுடர் ராஜேந்திரன் ஹர்ஷான் மற்றும் அவருடைய சகோதரியும் ராஜ நர்த்தனாலயத்தின் சிரேஷ்ட மாணவி ராஜேந்திரன் ஜனேஹாவும்  இணைந்து வழங்கிய ஆதாரம் ஆடலரங்கம் கலை நிகழ்ச்சி அண்மையில்  இனிதே நடைபெற்றது.
ராஜேந்திரன் ஹர்ஷான் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  பதுளை நூலக கேட்போர் கூடத்தில் பதுளையில் முதலாவது பரதநாட்டிய அரங்கேற்றத்தை நிறைவு செய்ததுடன், 2018 ஆம் ஆண்டு சேர் பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய அரங்காற்று கலைகள் பீடம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு சென்று 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தன்னுடைய பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.  பின்னர் ராஜ நர்த்தனாலயத்தின் ஊடாக தாமே நாட்டிய உருப்படிகளுக்கு நாட்டிய அமைப்பு செய்து முதல் நாட்டிய நிகழ்ச்சியை சிறட்புற நிகழ்த்தி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.
இவரிடம் கல்வி பயின்ற இவரது சகோதரி செல்வி. ராஜேந்திரன் ஜனேஹா ,சேர் பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய அரங்காற்று கலைகள் பீடம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது மாணவியாவார்.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,  ஜனாதிபதியின் சிருஷ்ட ஆலோசகர்ருமான  வடிவேல் சுரேஷ் , கௌரவ விருந்தினராகனராக ஊவா வெல்லஸ்ச பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளர் மற்றும் முகாமைத்துவ பீடத்தின் தலைவர் பேராசிரியர் மார்க்கண்டன் ரூபவாதனன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக சேர் பொன்னம்பலம் ராமநாதன் காண்பிய அரங்காற்று கலைகள் பீடத்தின் நடனத்துறை விரிவுரையாளர் முதுகலைமானி திருமதி. துஷ்யந்தி சுகுணன், பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வருகை தந்திருந்த ஆசிரியர் பூபாலசிங்கம் நிதர்சன், மற்றும்  பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் திருமதி மலர்மதி ரவிச்சந்திரன் கலந்து சிறப்பித்தனர்.
இளங்கலைஞர்களைக் கொண்டு சிறப்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு பக்கவாத்திய கலைஞர்களாக நட்டுவாங்கம் மிதுர்ஷி ராஜேந்திரன், லோஜிகா கமலநாதன், திவ்யா யோகராஜா ஆகியோரும் மிருதங்கம் முரளிதரன் சுலக்ஷன் அவர்களும் வாய்ப்பாட்டு கந்தசாமி கவிநாத் அவர்களும் வயலின் இசை கேதீஸ்வரன் வேலதீபன் அவர்களும் குழலிசை சிவஞானசுந்தரம் ஜூட் அவர்களும் அணிசேர்க் கலைஞர்களாக இருந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.
பதுளை பகுதியை பிறப்பிடமாக கொண்டு  பரதநாட்டிய கலையில் ஈடுபாடு கொண்டு, இத்துறையில் தன்னையும் வளர்த்துக் கொண்டு பரதநாட்டியம் பயில ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு ஆசானாக இருந்து வழிகாட்டி வரும்  ஹர்ஷானின் கலைப் பணி அனைவரது பாராட்டையும் பெற்றமை சிறப்பம்சமாகும்.
 ஆ.புவியரசன் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here