பத்தாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது சபாநாயகராக பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் Dr.ஜெகத் விக்கிரமரட்ண சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது சபாநாயகராக நவம்பர் மாதம் 21ஆம் திகதி கலாநிதி அசோக ரன்வல சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரது பெயருக்கு முன்னால் உள்ள ‘கலாநதி’ பட்டம் தொடர்பில் எழுப்பிய சர்ச்சையின் பின்னர் ஆராய்ந்து பார்த்ததில் அவர் கலாநதி தகுதிக்கு உட்படாதவர் என தெரியவந்ததையடுத்து பல்வேறு அழுத்தத்தின் மத்தியில் அசோக ரன்வல எம்.பி தனது சபாநாகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்தே இன்று 17ஆம் திகதி மீண்டும் புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முந்தைய செய்தி