பன்னிரண்டு வயது பள்ளி மாணவனின் செயல் : கம்பளையில் சம்பவம்

0
135

கம்பளை  நகரில் அமைந்துள்ள   தனியார் கல்வி நிறுவனத்தில் மேலதிக  வகுப்பிற்குச் சென்று  வீடு திரும்பிக் கொண்டிருந்த பன்னிரண்டு வயது பள்ளி மாணவனை சிலர் வேனில் கடத்தி சென்றுண்டிருந்த போது   ஹட்டன் நகரில் வைத்து  வேனின்  ஜன்னல் வழியாக பாய்ந்து  தப்பித்து  (02) இரவு  1 மணிக்கு கம்பளை ஹெட்கால பொலிஸ்  நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இதன் போது கம்பளை விக்கிரமபாகு தேசிய பாடசாலையில் கள்ளி கற்றுவந்த  உலப்பனை, உடகம பகுதியைச் சேர்ந்த மாணவனே கடத்தல் கார்களிடமிருந்து தப்பித்து வந்துள்ளார்

குறித்த மாணவன் மேலதிக வகுப்பு முடிந்து  கம்பளை-வீகுலவத்தை பாதை  வழியாக பேருந்து நிறுத்தும் இடத்திற்கு  சென்று கொண்டிருந்தபோது, ​​வழியில் நின்ற மூன்று பேர் அவரை மிரட்டியதாகவும்

பின்னர், மாணவன்  கம்பளை தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தும்  இடத்தில் வைத்து , வீடு திரும்புவதற்காக நாவலப்பிட்டிக்குச் செல்லும் பேருந்தில் ஏறிய சந்தர்ப்பத்தில் , ​​முன்பு அவரை அச்சுறுத்திய மூன்று பேரில் ஒருவர் வந்து  மாணவன் அமர்ந்திருந்த  இருக்கையில் மர்ந்து கொண்டு

பின்னர்  உலப்பனையில்  மாணவர் பேருந்தில் இருந்து இறங்க முயன்றபோது, ​​     கத்தியை காட்டி,  அச்சுறுத்தி,  இறங்க விடாமல் தடுத்துள்ளதோடு நாவலப்பிட்டி கடோல் போக்குவ பிரதேசத்தில் வைத்து பேருந்தை விட்டு இறங்கிய சந்தர்ப்பத்தில் கடதியவன் மாணவனின் தோல் மீது கைபோட்டதன் பின்னர் தான்  சுயநினைவை இறந்துவிட்டதாகவும்

பின்னர்  சுயநினைவு திரும்பியபோது, ​​தான் ஒரு வேனுக்குள் இருப்பதை உணர்ந்ததாகவும், யாரும் இல்லாததால், வேனின் கதவைத் திறந்து வெளியேற முயன்றதாகவும், ஆனால் அது பூட்டப்பட்டிருந்ததால், ஜன்னல் வழியாக குதித்ததாகவும்

பின்னர் வீதியில்  சென்று கொண்டிருந்த  முச்சக்கர வண்டியை நிறுத்தி   ஓட்டுநரிடம் நடந்த சம்பவத்தைச் கூறி , தனது தாயாரிடம் விடயத்தை கூறியதாகவும் பொலிஸாரின் விசாரணையின் போது மாணவன் கூறியுள்ளார்

இதன் போது  முச்சக்கர வண்டியின் சாரதி அட்டன் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார். அட்டன் பொலிஸ் நிலைய  குழந்தைகள் மற்றும் பெண்கள் பிரிவைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் வந்து மாணவனை மீட்டதோடு  பெற்றோரை  வரவழைத்து, மாணவனை ஒப்படைத்துள்ளனர் .பின்னர் அவர்கள் மாணவனை   (2) அதிகாலை கம்பளை பொலிஸ் நிலையம் அழைத்து வந்துள்ளனர்

 கம்பளை பொலிஸார் அவர்களை ஹெட்காலை  பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர் மேற்படி சம்பவம் தொடர்பாக  விசாரணைனை மேற்கொள்ள   மூன்று பொலிஸ் குழுக்கள்  நியமிக்கப்பட்டு.விசாரணைகள் இடம் பெறுற்று வருகின்றன

கம்பளை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here