பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 129 பேர் சிறையில்

0
220

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 129 பேர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவர்களில் 125 பேர் விளக்கமறியலில் உள்ளதாக தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் உத்தரவிற்கு அமைய இலங்கை பொலிஸார் வழங்கிய தகவலின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. 

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பெரும்பாலானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த எண்ணிக்கை 81 ஆகும். அவர்களில் 42 பேர் உயர்நீதிமன்றத்தினாலும், 39 பேர் நீதவான் நீதிமன்றத்தினாலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 44 பேர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நீதிமன்ற உத்தரவின்றி இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும், மற்றையவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், பொலிஸாரின் புள்ளிவிவரங்களுக்கும் சிறைச்சாலை புள்ளிவிவரங்களுக்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாக முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ‘

2021 ஓகஸ்டில்’ சிறைச்சாலை புள்ளிவிவரத் திணைக்களத்தின் தகவல்களுக்கு அமைய, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆகும்.  85 பேர் விளக்கமறியலில் உள்ளனர். 205 பேர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

ஆகவே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 298 ஆகும்’ என சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here