பரிசுத்த பாப்பரசரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்

0
49

88 வயதான பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ், சுவாச நோய்க்கான சிகிச்சைகளுக்காக ரோமில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் தெரிவிக்கின்றன.

உடல் நலக் குறைவால் அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதனால், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவார் என வத்திக்கான் அறிவித்துள்ளது.

உடல்நலக் குறைவால் பாதிப்புக்குள்ளாகியுள்ள பரிசுத்த பாப்பரசரின் அனைத்து பயணங்கள் மற்றும் நிகழ்ச்சிகளையும் சில நாட்களுககு இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக வத்திக்கான் மாளிகை அறிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த 2021 மற்றும் 2023 ஆண்டுகளில் பாப்பரசர் பிரான்சிஸ் சத்திர சிகிச்சைகளுக்கும் உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here