பல்கலைக்கு விண்ணப்பிப்பதற்கான இலவச வழிகாட்டல் செயலமர்வு

0
165

மலையகக் கல்வி அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்க காத்திருக்கும் மலையக மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வொன்று எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு அட்டன் குடாகமையில் அமைந்துள்ள மலையக கல்வி அபிவிருத்தி மையத்தில் பேராசிரியர் ஏ.எஸ். சந்திரபோஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.

முற்றிலும் இலவசமாக நடைபெறும் இச்செயலமர்வில் ஆர்வமுள்ள சகல மாணவர்களும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி செயலமர்வில் பங்கேற்கும் மாணவர்கள் கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தர மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகள், அடையாள அட்டை பிரதி, நிலையான தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பவற்றுடன் வருகைத்தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி செயலமர்வின் வளவாளர்களாக அட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியின் முன்னாள் அதிபர் எஸ். விஜயசிங், ஆசிரியர் ஆர். மகேந்திரன் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here