பல வாகனங்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு – கண்டி வீதியில் கேகாலை ரன்வல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கேகாலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மூன்று மோட்டார் சைக்கிள்கள் கண்டி நோக்கி பயணித்த வேனுடன் மோதியதில்இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் துல்ஹிரிய மற்றும் வெயாங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வேன் சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணமானதாக தெரிவித்த பொலிஸார், வேனின் சாரதியை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.