பழுதடைந்த கதிரை, மேசைகளை திருத்தி அமைக்கப்பட்டு பாடசாலைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம்!

0
205

இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத்த கல்வி வலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பழுதடைந்த கதிரை, மேசைகளை திருத்தி அமைக்கப்பட்டு பாடசாலைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் கடந்த புதன்கிழமை(16) சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் எலபாத்த மகா வித்தியாலயத்தின் கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது.

மேற்படி எலபாத்த கல்வி வலயத்திற்குற்பட்ட 7 பாடசாலைகளிலிருந்து பெறப்பட்ட பழுதடைந்த கதிரைகள் மற்றும் மேசைகளை திருத்தி அமைக்கப்பட்டு எலபாத்த கல்வி வலயத்தில் உள்ள 22 பாடசாலைகளுக்கு நேற்றைய வழங்கி வைக்கப்பட்டன.

இதில் மாணவர்களுக்கான 215 கதிரைகளும், 101 மேசைகளும் மற்றும் ஆரம்ப பிரவுகளுக்கான 190 கதிரைகளும் 53 மேசைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
மேற்படி பழுதடைந்த மேசை கதிரைகளை திருத்தி அமைக்கப்பட்டு பாடசாலைகளுக்கு வழங்கும நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் 27 மில்லியன் ரூபா நிதி தொகையினை மிகுதி படுத்தி அரசாங்கத்திற்கு வழங்க முடிந்துள்ளது.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, இராஜாங்க அமைச்சர்களான ஜானக்க வக்கும்புர, பிரேமலால் ஜயசேகர, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சுஜானி விஜேதுங்க, மாகாண ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் மஞ்சுலா இதிகாவெல, சப்ரகமுவ மாகாண கல்வி பணிப்பாளர் சேபால குறுப்பு ஆராச்சி, உதவி கல்வி பணிப்பாளர் எஸ்.பி.ஜேசுப்பிள்ளை உட்பட முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

சிவா ஸ்ரீதரராவ் –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here