பழுதடைந்த பாண் வழங்கிய வழங்கிய கடை உரிமையாளருக்கு ஒருமாத சிறை

0
155

மட்டக்களப்பு மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலை நோயாளர்களுக்கு மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவான பாண் வழங்கிய ஓப்பந்தகாரரின் ஒப்பந்தத்தை ஏறாவூர் நீதவான் நீதிமன்ற நீதவான் உடனடியாக இரத்து செய்ததுடன் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறும் உணவு உற்பத்தி செய்த கடை உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபா தண்டப்பணம் ஒரு மாதகால சிறைத்தண்டனையை வழங்கி நேற்று திங்கட்கிழமை (8) தீர்பளித்தார்.

மாவடி வேம்பு பிரதேச வைத்தியசாலை நோயாளிகளுக்கு காலை உணவாக மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவான பழுதடைந்த பாண் வழங்கியுள்ளர் .து தொடர்பாக நோயாளர்கள் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து சுகாதார வைத்திய அதிகாரி, மற்றும் செங்கலடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுகளை வைத்தியசாலை நோயாளிகளுக்கு வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் வைத்தியசாலைக்கு உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்தகாரர், உணவை வழங்கிய கடை உரிமையாளரிற்கு எதிராக ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை வழக்கு தாக்குதல் செய்து இருவரையம் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் நோயாளர்களுக்கு உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்தகாரரின் ஒப்பந்தத்தினை உடனடியாக இரத்து செய்ததுடன் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் அதை உரிய தவணையில் கட்டத்தவறின் 3 மாதகால சிறைத்தண்டனையும் 10 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 3 மாத சிறை தண்டனையும் வழங்கி உணவு தயாரித்து வழங்கிய கடை உரிமையாளரை 5 ஆயிரம் ரூபா தண்டப்பணம் ஒரு மாதகால சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.

(கனகராசா சரவணன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here