எரிபொருள் விலையேற்றத்துக்கமைய பஸ் கட்டணத்தை அதிகரிக்காமல் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரண அடிப்படையில் எரிபொருள் வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிருன்டா தெரிவித்தார்.
பஸ் கட்டண திருத்தம் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் முதலாம் திகதி திருத்தம் செய்யப்படும்.12 யோசனைகளுக்கமைய பஸ் கட்டணத்தை திருத்தம் செய்ய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் பஸ் கட்டணம் நான்கு முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் விலையேற்றம ஆகிய காரணிகளை கொண்டு பஸ் கட்டணம் மீண்டும் திருத்தம் செய்யப்பட வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
தற்போதைய நிலையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்காமல் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு குறுகிய காலத்துக்கு எரிபொருளை நிவாரண அடிப்படையில் வழங்க முன்வைக்கப்பட்டுள்ள யோசனை குறித்தும் பரிசீலனை செய்யப்படும் என்றார்.