வழமையாக பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் இன்று காலை இல்லாத காரணமாக தனியார் பேரூந்து ஒன்றில் பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த பஸ் வண்டி விபத்து,
புப்புரஸ்ஸ நகரில் இருந்து கலஹா நகரை நோக்கி வந்த தனியார் பேரூந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இன்று காலை புப்புரஸ்ஸ நகரில் இருந்து சுமார் 150ற்க்கு மேற்ப்பட்ட பாடசாலை மாணவர்களை ஏற்றி கொண்டு வந்த பேரூந்து கலஹா புப்புரஸ்ஸ பிரதான வீதியில் பத்திரவதி பாடசாலைக்கு அருகில் வைத்து முச்சக்கரவண்டியில் மோதி விபத்து ஏற்ப்பட்டுள்ளது,
தெய்வாதீனமாக பாடாசாலை மாணவர்கள் உயிர் தப்பித்தனர்,
இந்த விபத்தில் முச்சக்கரவண்டிக்கு சேதம் ஏற்ப்பட்டுள்ளது, இதனால் மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்,