பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பது தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

0
50

தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு , இன்று (27) ஜனாதிபதி செயலகத்தில் அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்காக கீழ் மட்டத்திலிருந்து வலுவான பொறிமுறையொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான நிலையங்களில் தங்க வைத்து தேவையான உணவு மற்றும் மலசலகூட வசதி வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் அந்த மக்களுக்கு உதவி வழங்கத் தேவையான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளுக்கு அறிவிததுள்ளார்.

மேலும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வது குறித்தும், சீரற்ற காலநிலை காரணமாக அதிக ஆபத்துள்ள வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தொடர்பிலும் இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.

தற்போது மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றிருக்கும் மீனவர்கள் தொடர்பில் தேடியறிந்து அவர்களை பாதுகாப்பாக கரை சேர்ப்பதற்கு அவசியமான வசதிகளை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தரமான சேவைகளை வழங்கி, பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here