சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட வட்டவளை மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் நிவாரணம் வழங்கியது.
நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையுடன் மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட வட்டவளை மக்களுக்கு நிவாரணம் வழங்க செஞ்சிலுவைச் சங்கம் முன் வந்திருப்பது. பாராட்டக்கூடியதும் வரவேற்க தக்கது.என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார்.
நந்தன கலபட மேலும் தெரிவிக்கையில்,
எனது வேண்டுக்கோளையேற்று செஞ்சிலுவைச் சங்கம் வட்டவளை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 63 குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் சுகாதார உபகரணங்களையும் வழங்க முன் வந்ததையிட்டு இச் சங்கத்திற்கு நன்றி தெரிவிக்கின்றேன். இதே போல நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய பிரதேச மக்களுக்கும் நிவாரணங்கள் வழங்க பொது அமைப்புகள் முன் வர வேண்டும். என அழைப்பு விடுத்தார்.
நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளை நிறைவேற்று அதிகாரி எஸ்.சந்திரசிறி கலந்துகொண்டார்.
டி சந்ரு