முஸ்லிம் சேவையின் பாரம்பரியம் நிகழ்ச்சித் தொடரின் நேர்காணலில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவைக்கு இலக்கியப் பங்களிப்பு வழங்கி புகழ்தேடி, நம்மை விட்டும் பிரிந்தோர் வரிசையில் முது பெரும் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் காலஞ்சென்ற ஈழமேகம் பக்கீர் தம்பி நினைவுகூரப்படுகிறார்.
இவரது நினைவுகளை தென் கிழக்கு பல்கலைக்கழக மொழித் துறைக்கான சிரேஷ்ட முதன்மை பேராசிரியர் அல்ஹாஜ் ரமீஸ் அப்துல்லாஹ் பகிர்ந்து கொள்கிறார்.
இந்நிகழ்ச்சி நாளை 16 ஆம் திகதி செவ்வாய் (16.07.2024) இரவு 8.10 மணியளவில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகிறது.
1960 களில் இலங்கை வானொலியில் அப்போது முஸ்லிம் நிகழ்ச்சிகளாக ஒலிபரப்பான நிகழ்ச்சிகளுக்கு, கவிதைகள் பல பாடியதோடு, இஸ்லாமிய நற்சிந்தனைகள், சன்மார்க்க, பழம் தமிழ் சார்ந்த உரைகளும் நிகழ்த்தியுள்ளார். பின்னாட்களிலும் இவரது பங்களிப்புகள் அதிகமாக முஸ்லிம் சேவைக்குக் கிட்டியுள்ளன.
முஸ்லிம் சேவையில் இவர் பேசிய உரைகளின் தொகுப்புகளை “உரை மலர்” எனும் நூலாகவும், பத்திரிகைக்கும் வானொலிக்கும் எழுதிய கவிதைகளை “மழையும் துளிகள்” எனும் நூலாகவும் வெளியிட்டுள்ளார். “அறவழிக்கீதம்” என்ற தலைப்பிலும் நூலொன்றினை வெளியிட்டுள்ளார். இந்நூல்கள் கவிஞர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் மத்தியில் இவருக்கு பெரும் செல்வாக்கைத் தேடிக்கொடுத்தன.
கிழக்கு மாகாணம் தொட்டு தலை நகர் அடங்கலாக நாட்டின் பல பகுதிகளிலும் நிகழ்த்திய மீலாத் பேச்சுகள் இன்றும் பேசப்படுகின்றன. இவர் பேசுவதை கேட்பதற்காக பல பகுதிகளிலிருந்தும், மக்கள் பெருந்திரளாக கூடுவதை நம் மூத்தோர் பகிர்ந்து மகிழ்ச்சி காண்கிறார்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் இவரது நாவன்மைக்காக “ஈழமேகம்” என பட்டம் வழங்கி மேன்மைப்படுத்தினார். அன்றைய நிகழ்ச்சியில் இவரைப் பற்றிய இன்னும் மேலதிக தகவல்கள் எம்.எஸ்.எம். ஜின்னாவின் நேர்காணலில் வெளிகொணரப்பட இருக்கின்றன.
இந்நிகழ்ச்சியை முஸ்லிம் சேவைப் பொறுப்பாளர் எம்.ஜே.பாத்திமா ரினூஷியா தயாரித்தளிக்கிறார்.
முஸ்லிம் சேவையின் பாரம்பரியம் நிகழ்ச்சித் தொடரின் நேர்காணலில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவைக்கு இலக்கியப் பங்களிப்பு வழங்கி புகழ்தேடி, நம்மை விட்டும் பிரிந்தோர் வரிசையில் முது பெரும் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் காலஞ்சென்ற ஈழமேகம் பக்கீர் தம்பி நினைவுகூரப்படுகிறார். இவரது நினைவுகளை தென் கிழக்கு பல்கலைக்கழக மொழித் துறைக்கான சிரேஷ்ட முதன்மை பேராசிரியர் அல்ஹாஜ் ரமீஸ் அப்துல்லாஹ் பகிர்ந்து கொள்கிறார்.
இந்நிகழ்ச்சி எதிர்வரும் 16 ஆம் திகதி செவ்வாய் (16.07.2024) இரவு 8.10 மணியளவில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகிறது.