மின்வெட்டு, விலைவாசி உயர்வு மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு எதிராக பெரும்பாலான லிபிய நகரங்களில் பேரணிகள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக தொடர் போராட்டங்கள் இடம்பெறுகின்றன.
அதன் ஓர் அங்கமாக லிபியாவின் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுவரும் மக்கள், டோப்ரூப் நகரிலுள்ள அந்நாட்டின் பாராளுமன்றத்துக்கு தீ வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2011 ஆம் ஆண்டு நேட்டோ ஆதரவு கிளர்ச்சியால் லிபியாவில் நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த கேணல் முயம்மர் கடாபியை பதவி நீக்கம் செய்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.