பாராளுமன்றத் தரப்பிலும் 60 வயதை கடந்தவர்களுக்கு டிசம்பர் ஓய்வு

0
288

பாராளுமன்ற தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்து 60 வயதை கடந்தவர்களுக்கு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் ஓய்வு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், பாராளுமன்ற பொதுச் செயலாளர் ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வு வயதெல்லையை 65 ஆக நீடிக்க அண்மையில் முயற்சி களை மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், அரசாங்கம் குறைந்தபட்ச ஓய்வூதிய வயதை 60 ஆக குறைத்துள்ள நிலையில், அந்த ஊழியர்க ளும் 60 வயதில் ஓய்வு பெற வேண்டியது அவசியமாகும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது பணிபுரியும் 60 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் டிசம்பர் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன் ஓய்வு பெறலாம்.

60 வயதை பூர்த்தி செய்த ஊழியர்களின் ஓய்வுக்கு தேவையான கடித கோப்புகளை தயாரிப்பதற்கு தேவையான ஆவணங்களை நிறுவன பணியகத்திற்கு வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் தலைமைச் செயலக ஊழியர்கள் 50 வயதை கடந்திருந்து 60 வயதுக்கு முன்னதாக ஓய்வுபெற விரும்பினால், ஓய்வு பெறும் திகதியிலிருந்து 06 மாதங்களுக்கு முன்னதாக எழுத்துபூர்வமாக அறிவித்து சபாநாயகரிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here