இலங்கையில் கடந்த மே மாதம் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையின் போது கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் குடும்பத்தினருக்கு 09 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மறைந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினரின் மனைவியிடம் நன்கொடையை கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற ஆளும் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தின் போதே உரிய தொகைக்கான காசோலையை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் போது பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.
தற்போதுள்ள 183 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்தே குறித்த நன்கொடை தொகையை வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.