மொனராகலை பிபிலை மட்டக்களப்பு ஆகிய வீதிகளில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் குறித்த வீதி போக்குவரத்து முற்றாகவே தடைப்பட்டுள்ளதுடன் நாளாந்த கடமைகளில் ஈடுபடுவோரினது சகல செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளது.
பசறை மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று அதிகாலை 2.55 மணியளவில் இந்த பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அறியக்கூடியதாக இருக்கின்றது.
பசறை பொலிஸார் விரைந்து பாதையை சீரமைக்கும் பணியில் துரிதமாக செயற்பட்டு வருகின்றனர். எனினும் தொடர்ந்தும் மண்சரிவு ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.