இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு பால் மா உற்பத்தியாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி 400 கிராம் பால் மா பக்கெற் ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது. இதன்படி புதிய விலை 950 ரூபாவாகும்.
மேலும் முழு ஆடைப் பால்மா கிலோ ஒன்றின் விலை 230 ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது. இதன்படி புதிய விலை 2,350 ரூபா என்பதும் குறிப்பிடத்தக்கது.