முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பு நீதிவான் நீதிமன்றில் அவரது சட்டத்தரணிகளுடன் ஆஜராகி பிடிவிறாந்தில் இருந்து விடுவிக்கப்பட்டு வழக்கு தை மாதம் பிற்போடப் பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சு. மனோகரன் , கொழும்பு வெள்ளவத் தையை சேர்ந்த வர்த்தக ஒருவருக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மில்லியன் தொகை பணத்தை கடனாக கொடுத்தார்.
இதில் கடனை பெற்ற சு. மனோகரன் மோசடியான காசோலையை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கியிருந்தார் ,
இது ஒரு மோசடியான காசோலை என அறிந்த முன்னாள் அமைச்சர் நீதிமன்றில் முறைப்பாடு செய்து தற்போதும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. கடந்த மூன்று வெவ்வேறு சந்தர்பங்களில் முன்னாள் அமைச்சரை சாட்சி சொல்ல நீதிமன்றம் கோரியிருந்தது ஆனால் அந்த சந்தர்பங்களில் தேர்தல் வேலைகள் மற்றும் உடல் நல குறைவால் கலந்து கொள்ள முடியாமல் போனது அவ்வாறான சந்தர்பத்தில் கடந்த கிழமை நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது நீதிமன்றில் வந்து சாட்சி கூறுவதற்கு இவ்விடயத்தை திரிவுபடுத்தி முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேல் காழ்
காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் தொடர் சேறு பூசும் வேலை செய்தார்கள்.
உண்மையில் பணத்தை கொடுத்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணத்தை அச்சுறுத்தியோ அல்லது பயமுறுத்தியோ , ஒரு சிலர் கூறுவது போல் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பணத்தை மீள பெற முயற்சிக்கவில்லை மாறாக நீதிமன்றத்திற்கு ஊடாகவே அதன் நடைமுறைகளுக்கு ஏற்பவே பெற முயற்சித்தார் இதன் மூலம் பல உண்மைகள் வெளிப்படுகின்றது மாத்திரமல்லால் அவர்மேல் உள்ள கறைகளும் அகற்றப்படுகின்றது .