பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலய கொடியேற்றம் இன்று

0
471

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் கோவிலின் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது.

அதேவேளை, உகந்தை மலை ஸ்ரீ முருகன் கோவில் கொடியேற்றமும், கோவில் பிரதமகுரு சிவசிறி க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.

கொடியேற்றம் தொடங்கி தொடர்ச்சியாக 15 நாட்கள் திருவிழாக்கள், பெரஹரா இடம்பெற்று, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி கதிர்காமத்தில் தீர்த்த உற்சவமும் அதேபோன்று, உகந்தை முருகன் கோவிலின் தீர்த்த உற்சவம் எதிர்வரும் 11ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here