பிரதமர் மோடி 1.52 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

0
186

வாரணாசி தொகுதியில் 3வது முறையாக பா.ஜ., சார்பில் களமிறங்கி உள்ள பிரதமர் மோடி 1.52 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.

உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, இன்று (ஜூன் 4) ஆரம்பத்தில் முதல் 4 சுற்று முடிவில் பின்னடைவை சந்தித்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்து அதிக ஓட்டுகளை பெற்ற பிரதமர் மோடி 6,11,439 ஓட்டுகளுடன் வெற்றியை தன்வசப்படுத்தினார். இது காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 1.52 லட்சம் ஓட்டுகள் அதிகம்.

வாரணாசி தொகுதியில் தொடர்ந்து 3வது முறையாக போட்டியிட்டு, பிரதமர் மோடி ‘ஹாட்ரிக்’ வெற்றிப்பெற்றதை பா.ஜ., தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த தேர்தலில் வாரணாசி தொகுதியில் 6 லட்சத்து 76 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்ற பிரதமர் மோடி, இம்முறை 1.52 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here