முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, வங்கி சந்தியில் இன்று (2) மாலை முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், கொட்டிகாவத்த – முல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன உறுப்பினரான சுமுது ருக்ஷான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேச சபை உறுப்பினர் முல்லேரியா வங்கி சந்தியில் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் அவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்