பிரபல தபேலா இசைமேதை சாகிர் ஹுசைன் (Zakir Hussain) தனது 73ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.
அமெரிக்கா சென்பிரான்சிஸ்கோ உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த தகவலை ஜாகிர் உசேனின் நண்பரும் புல்லாங்குழல் கலைஞருமான ராகேஷ் சௌராசியா நேற்று (15) தெரிவித்துள்ளார்.
பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் ஹுசைன் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளுக்காக அமெரிக்கா, சென்பிரான்சிஸ்கோ உள்ள வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.