நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தை வசிப்பிடமாக கொண்ட வடிவேல் சரஸ்வதி தம்பதிகளின் மூத்த புதல்வன் பிராந்திய ஊடகவியலாளர் கார்த்திக் அகில இலங்கை சமாதான நீதவனாக (24.07.2024) நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி என். டபிள்யூ. கே. எல். பிரபுதிகா லாங்காங்கனி அவர்களின் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் நுவரெலியா புனித சவேரியார் கல்லூரியின் பழைய மாணவரும், ஊடகவியலாளரும், மனித உரிமைகள் அமைப்பு லங்கா நிறுவனத்தின் ஊடக அங்கத்துவரும், சன்பேர்ட்ஸ் விளையாட்டு கழகத்தின் செயலாளரும்,
நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்க உப செயலாளரும்
ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல நுவரெலியா மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் எட்வர்ட் ஜோர்ச் அகில இலங்கை சமாதான நீதவானாக நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதிபதி
என். டபிள்யூ. கே. எல். பிரபுதிகா லாங்காங்கனி அவர்களின் முன்னிலையில் (24.07.2024) காலை சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் கந்தப்பளை போட்ஸ்வூட் தோட்டத்தை சேர்ந்த சுப்ரமணியம் அற்புதமேரி தம்பதிகளின் புதல்வரான இவர் சிறந்த சமூக சேவையாளரும்,லிந்துலை வோல்ட்றிம் வித்தியாலயம்,
கந்தப்பளை மெதடிஸ்ட் கல்லூரி, மற்றும் நுவரெலியா புனித சவேரியார் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரும், புனித சவேரியார் தேவாலய நிதி குழு உறுப்பினரும்,ஆலய பங்கு சபை உறுப்பினருமாவார்.
ஆ.ரமேஸ்.