சமையல் எரிவாயுடன் கப்பலொன்று இன்றைய தினம் நாட்டை வந்தடையும் என லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு கப்பலிலிருந்து லிட்ரோ Gas 3500 மெ. தொன் இறக்கப்பட்டு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட பின் எதிர்வரும் புதன்கிழமை முதல் அதனை பகிர்ந்துளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
காலநிலை சீராக அமையுமென்றால் குறித்த கப்பலை கெரவலப்பிட்டி லிற்றோ கேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான முனையத்தில் நங்கூரமிட்டு பத்து மணித்தியாலங்களில் அதனை பரிசீலிக்கும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியும். அதற்கிணங்க நாளை மறுதினம் முதல் வழமையான சமையல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
அதேவேளை, இரண்டு தினங்களுக்கு அனாவசியமாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என மக்களை கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்த அவர் சமையல் எரிவாயுடன் மேலும் இரண்டு கப்பல்கள் இந்த வாரம் நாட்டுக்கு வந்தடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
03.