புதிய பிரதமராக சஜித்

0
509

சர்வகட்சி அரசாங்கத்தில் பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை பரிந்துரைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அவ்வாறு அவரது பெயரை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தால் பெரும்பான்மையை நிரூபிப்பது அவசியமாகும்.

எனவேதான் இது குறித்து ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகுமாறு வலியுறுத்தி இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முறையாக ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையை பொது மக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

இதனையடுத்து நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் 95 சத வீதமான கட்சி தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி , பிரதமரை பதவி விலகுமாறு சபாநாயகர் ஊடாக நாமும் கேட்டுக் கொண்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here