புத்தம் புதிய மோட்டார் சைக்கிளின் விலை தொடர்பாக வெளியான அறிவிப்பு

0
133

புத்தம் புதிய மோட்டார் சைக்கிளின் விலை கிட்டத்தட்ட ரூபா 1 மில்லியன் (10 இலட்சம் ரூபாவாக) நிர்ணயிக்கப்பட்டடுள்ளது. நாட்டில் வாகன இறக்குமதி மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் பெறப்படும் முதல் தொகுதி வாகனங்களின் விலைகளே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனம் தங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் புத்தம் புதிய பல்சர் N160 மோட்டார் சைக்கிளின் விலை ரூபா 934,950 என்று அறிவித்துள்ளது.

புத்தம் புதிய டிஸ்கவர் 125 DRL மோட்டார் சைக்கிளின் விலை ரூபா 731,950 மற்றும் புத்தம் புதிய CT 100 ES மோட்டார் சைக்கிளின் விலை ரூபா 637,950 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here