புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு செய்துள்ளனர்

0
132

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வங்கிகள் மூலம் முறையாக டொலர்களை அனுப்பி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்புச்செய்துளளனர் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஒரு இலட்சம் புலம்பெயர்ந்த தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம் குருநாகல் வெலகெதர விளையாட்டரங்கில் (21) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தர்

நாட்டுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் “2016 இல் 7.2 பில்லியன் டொலர்கள், 2018 இல் 7.1 பில்லியன் டொலர்கள், 2019 இல் 6.7பில்லியன் டொலர்கள் மற்றும் 2020 இல் 7.1 பில்லியன் டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளன.

2021 ஆண்டு 5.4 பில்லியன் டொலராகக் குறைந்து. இது மீண்டும் 2022 ம் ஆண்டில் 3.7 பில்லியனாகக் குறைவடைந்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியுடன் டொலர் நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

நான் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சை பெறுப்பேற்றதன் பின்னர் இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார் மற்றும் எமது அமைச்சின் செயலாளர் ஆகியோர் இணைந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து முறையாக வங்கி ஊடக நாட்டுக்கு டொலர்களை கொண்டுவரும் இந்தப் பணியை முன்னெடுத்ததன் மூலம் 2022ஆம் ஆண்டு 5.9 பில்லியன் டொலர்களாக உயர்த்த முடிந்தது.

2024 ம் அரையாண்டுக்குள் நாட்டிற்கு 12 பில்லியன்டொலர்கள் புலம்பெர்ந்த தொழிலாளர்கள் அனுப்பி வைத்ததன் மூலம் பாரிதொரு பங்களிப்பை வழங்கிவுள்ளனர் .

புலம்பர்ந்த தொழிலார் சமூகத்திடம் நாட்டுக்கு டொலர்களை அனுப்ப வேண்டாம், நாட்டை மீளக்கட்டியெழுப்ப முடியாது எனக்கூறிய படி வீதிக்கு ஊடகவியலாளர்களுடன் சில அரசியல் தலைவர்கள் வந்து நாட்டை வீழ்த்த வேண்டுமானால் டொலர்களை அனுப்புவதை நிறுத்துங்கள் என கூச்சலிட்டனர்.

எல்லாவற்றையும் தாண்டிஅமைச்சரவையில் பல்வேறு காலகட்டங்களில் ஜனாதிபதி எமக்கு வழங்கிய அறிவுறுத்தல்களின்படி இந்தப் பணியை முன்னெடுத்ததன் மூலம் 12 பில்லியன் டொலர்களை இந்த நாட்டிற்குக் கொண்டு வந்து கையிருப்பை அதிகரித்து எரிபொருள் , எரிவாயு, பால் மா போன்றவற்றை இந்த நாட்டுக்கு வழங்கியுள்ளோம். வெளிநாட்டில் உழைக்கும் சமூகம் என்ற வகையில், இன்று நாட்டைக் கட்டியெழுப்புவதில் அவர்களால் ஒரு அங்கமாக மாற முடிந்தது என்பதில் பெருமிதம்கொள்கின்றேன்

மேலும் நாட்டுக்கு முறையாக டொலர்களை அனுப்பிவைத்தவர்களுக்கு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ளவதற்க்கும் , வங்கிகள் மூலம் பணம் அனுப்ப சிலோன் ரெமிட் முறையை நடைமுறைப்படுத்தவும், தொழிலாளர்களுக்கு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 2.5 மில்லியன் முதல் 10 மில்லியன் வரை வட்டியுடன் கடன் வழங்கவும், பணியாளர்களுக்கு விமான நிலையத்தில் ஹோப்கேட் சிறப்பு கேட் , சமூக பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து ஓய்வூதி திட்டம் , RPL முறை மூலம் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் NVQ தரச்சான்றிதழ்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செயற்பட்டு வருகிறது என்பது சிசேட அம்சமாகும்

முதன்முறையாக வேலைக்குச் செல்பவர்களுக்கு 10,000 ரூபாய் வவுச்சரும், ஆறு முறைக்கு மேல் நாட்டிற்குச் சென்றவர்களுக்கு 25,000 ரூபாய்க்கு மேல் வவுச்சரும் வழங்கியதன் மூலம் இந்நிலை மேலும் மேம்படுத்தப்பட்டது.வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து நிதியளிக்க முடிந்தது. ஐம்பதாயிரம் ரூபாவில் ஆரம்பித்து இன்று போராடும் தொழிலாளர் சமூகத்திற்கு பணியகம் இதுவரை இரண்டு பில்லியன்களை ஒதுக்கியுள்ளது.

தொழில்முனைவர்களை உருவாக்க பணியகச் சட்டத்தால் கட்டாயப்படுத்தப்பட்ட ‘மீண்டும் ஒருங்கிணைத்தல்’ அல்லது சமூகமயமாக்கலின் கீழ், ஒரு இலட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கை முழுவதிலும் இருந்து தெரிவு செய்யப்படுவார்கள், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே உங்கள் எண்ணம். தொழில்முயற்சியாளர்களால் உருவாக்கப்பட்ட உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்கும் கருத்தாக்கத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பஙகளிப்பதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here