சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட புளியாவத்தை ஆரம்ப தமிழ் வித்தியாலயத்தில், யோகாசனத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு அளித்து மாணவர்களின் யோகாசன பயிற்சியை வெளிக்கொணரும் முகமான நிகழ்வொன்று அதிபர், உப அதிபர் தலைமையிலே நாளை 31ஆம் திகதி புதன்கிழமை கல்லூரியின் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
வலயக் கல்விப் பணிப்பாளர், உதவி கல்வி பணிப்பாளர், ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், பாடசாலையில் இருந்து வேறு பாடசாலைகளுக்குச் சென்ற ஆசிரியர்கள், பாடசாலை ஆசிரியர்கள் அபிவிருத்தி சங்க செயலாளர் உறுப்பினர்கள், நலன் விரும்பிகள், பழைய மாணவர்கள் , பாடசாலை மாணவர்கள் அனைவரும் இணைந்து யோகாசன தினமாக கொண்டாட இருக்கிறார்கள்.
மாணவர்களின் உலத்திறன் உடல் திறன் ஆகிவற்றை ஏற்படுத்தி சிறந்த உடல் ஆரோக்கியம் உள்ளவர்களாகவும், மனத்திடம் உடையவர்களாகவும் மாற்றி உன்னதமான வாழ்வை வாழ் வாங்கு வாழ செய்வதற்கான பயிற்சிக் களமாக இது அமைய இருக்கிறது.