பூநகரி தெஹியத்தகண்டிய, மன்னார் பிரதேச சபைகளுக்கான தேர்தல் மே 6 இல் நடக்கும்

0
19
தாமதமாக வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்ற பூநகரி, தெஹியத்தகண்டிய மற்றும் மன்னார் பிரதேச சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் தேதியன்று நடக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் ஏஎல்.ரத்னாயக்க அறிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் ஏலவே நீதிமன்ற செயற்பாடு காரணமாக விடுபட்டிருந்த  தெஹியத்தகண்டிய மற்றும் மன்னார், பூநகரி ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 24, 25, 26, 27  ஆம் திகதிகளில் நடைபெற்றது.
ஏலவே வேட்புமனுக்கள் தாக்கல் முடிந்த அனைத்து சபைகளுக்கும், நீதிமன்ற செயற்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் நேற்று நிறைவடைந்த தெஹியத்தகண்டிய, மன்னார் மற்றும் பூநகரி ஆகிய மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் ஏக காலத்தில் அதாவது மே மாதம் 06 ஆம் தேதி நடைபெறவுள்ளன.
ஆனால் , கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் நீதிமன்ற காரணங்களால் தற்போது நடைபெறமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here