வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு சென்ற பெண்களில் 9 பேர் சுய நினைவிழந்துள்ளதாகத் தகவல்

0
355

ஓமான் பாதுகாப்பு இல்லமொன்றில் விபசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட் டமையால் பாதிக்கப்பட்ட 41 பேர் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 9 பேர் இந்த நடவடிக்கையால் சுய நினைவை இழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்களாக பெண்களை அழைத்து சென்று, விபசாரம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் கும்பலை கண்டறிந்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க 18 நாடுகளுக்கு விசாரணை குழுக்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் வெளிப்படுத்தின.

இந்நிலையில் முதலில் ஓமானுக்கு செல்லவுள்ள விசாரணைக் குழு அங்கு பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்கு மூலம் பெற்று, சந்தேக நபர்களை அடையாளம் காணும் ஆரம்ப நடவடிக்கைகளை முனென்டுக்கவுள்ள நிலையில், ஏனைய 17 நாடுகளுக்கும் 17 குழுக்கள் அனுப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய மனிதக் கடத்தல் தடுப்பு செயலணி (National Anti Human Trafficking Task Force) ஊடாக இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசிய மனிதக் கடத்தல் தடுப்பு செயலணி உருவாக்கப்பட்டதிலிருந்து இவ்வாறான விசாரணை ஒன்றினை முன்னெடுக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here