பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கழுத்து பொது இடத்தில் அவரின் உயர் அதிகாரியொருவர் நெரிக்கும் காட்சிகள் சமூகவலைதத் தளங்களில் பரவிவருகின்றன. இது பல விமரச்னஙக் ளை எழுப்பியுள்ளதுடன் அநத் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் கோரப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட இருவரை விடுதலை செய்யுமாறு கோரி இரு பெண்கள் நேற்று முன்தினம் களுத்துறையில் இருந்து கொழும்பு வரை நடைபப் யணம் மேற்கொண்ட நிலையில் அதற்கு பொலிஸார் தொடர்ச்சியாக இடையூறு விளைவித்தனர்.
இதன்போது குறித்த பெண்களை கைது செய்யும் வேளையில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் அடாவடியாக நடந்து கொள்ளும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.