பெண் பொலிஸ் துஷ்பிரயோகம் ; பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

0
396

பெண் பொலிஸ் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செவனகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை நேற்று அம்பிலிபிட்டிய நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பணியில் புதிதாகச் சேர்ந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸ் பெண் கொழும்பு பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here