மலையக காணி உரிமை வழங்கும் திட்டத்தில் தடங்கல் ஒன்று ஏற்பட்டு இருப்பது பற்றி அனேகமானோர் அறிந்து இருப்பீர்கள். அத் தடங்கல் பெருந்தோட்ட நிறுவனங்களினால் ஏற்பட்டதே ஆகும் என மலையக பெருந்தோட்ட பாராளுமன்ற பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் (17) முற்பகல் மலையக பெருந்தோட்ட பாராளுமன்ற பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறிப்பாக மலையக மக்களுக்கான காணி உரிமை மற்றும் லயன் அறைகளை கிராமமாக்குதல் தொடர்பான சில விடயங்கள் தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
காணி உரிமை வழங்கும் திட்டத்தில் தடங்கல் ஒன்று ஏற்பட்டு இருப்பது பற்றி அனேகமானோர் அறிந்து இருப்பீர்கள். அத் தடங்கள் பெருந்தோட்ட நிறுவனங்களினால் ஏற்பட்டதே ஆகும்.
இன்றைய தினம் நடைபெற்ற கலந்துரையாடல் உண்மையில் மிகவும் நன்றாகத் தான் நடந்தது.
வருகை தந்திருந்த அனைவரும் இதை வரவேற்றார்கள். அதற்கு ஆதரவும் வழங்கினார்கள். சில திருத்தங்கள் சில மாற்றங்கள் தேவைப்படுவதாக கூறினார்கள்.
மேலும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜனாதிபதியிடம் ஒரே ஒரு விடயத்தை கூறுகையில் . சிலர் வந்து சொல்றாங்க, இல்லை நாம் இந்த எல்லைகளை கிராமங்களாக மாற்றிவிட்டால் லயன் அறைகளுக்கு அங்கீகாரம் வழங்குவது போல் ஆகும் என்று. அது அப்படி இல்லை, முதல் விடயம் என்னவென்றால் நாம் இதனை ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு மலையகத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு நான் சொல்வது உண்மை என தெரியும். கிட்டத்தட்ட 7500 இளைஞர்கள் வந்து கொழும்பில் வேலை செய்கிறா்கள்., காணி உரிமை இல்லாத இடத்தில் எது முக்கியம் என்று மக்களுக்கு தெரியும். வீட்டு உரிமை வேறு காணி உரிமை வேறு அதன் உண்மைத் தன்மையினை நாம் புரிந்துக் கொண்டாக வேண்டும். வீடு கட்டிய பின் தான் காணி உரிமை வழங்க வேண்டுமாயின் அது காணி உரிமை இல்லை அதற்கு பெயர் வீட்டு உரிமை.
இதற்கென ஒரு சட்டத்தை நிர்ணயித்து, அந்த சட்டம் மூலம் மக்களுக்கு காணியினை வழங்குவதே ஆகும். இது தான் எங்கள் திட்டம். அந்த சட்டம் மூலமாக மக்கள் வசிக்கும் இடத்தை ஒப்படைத்தல்( Settle) செய்வதாகும்.
அதாவது, கிராமங்களாக மாற்றம் செய்ய போகிறோம். லயன் அறைகளுக்கும் இதற்கும் தொடர்பே இல்லை. இவற்றை கிராமங்களாக மாற்றப் போகின்றோம். கிராமங்களாக மாற்றினால் மட்டும்தான் மக்களுக்கு தேவையான அரசாங்க வரப்பிரசாதங்கள் கிடைக்கும். இன்றைக்கு அனேகமான மக்களுக்கு தெரியும் சமூர்த்தியாக இருக்கட்டும் வேறு வேறு அரசாங்க வர பிரசாதங்களாக இருக்கட்டும் இன்றைக்கு அவர்களுக்கு கிடைக்காமல் போகின்றமைக்கு காரணம் அரசியல் சூழ்ச்சி கிடையாது, கிடைக்காத காரணம் தோட்டப் பகுதிகள் பெருந்தோட்ட கட்டுப்பாட்டுக்குள் வருவதே ஆகும்.
நாம் இந்த சட்ட மூலத்தில் தெளிவுப்படுத்த முனைவது, இவர்கள் இலங்கையர்கள் பெருந்தோட்ட நிறுவனங்களின் அடிமைகள் இல்லை. இதை சிலர் புரிந்துக் கொள்ளாமலும் புரிந்தும் புரியாமலும் இருக்கிறார்கள் இதற்கு காரணம் என்னவென்றால் இது தேர்தல் காலம் அரசியலாக தான் பார்கின்றார்கள்.
அதேபோல் நான் ஏற்கனவே கூரியதற்கு இனங்க கிட்டத்தட்ட 30000 மலசலக்கூடங்கள் தேவைப்படுது மலையக மக்களுக்கு. இதனை கட்டுவதற்கான அனுமதி கிடையாது காரணம் என்வென்றால் காணி உரித்து இல்லாமையே.
வடக்கு, கிழக்கில் இந்திய அரசாங்கம் மூலமா 28000 வீடு கட்டி இருக்கின்றார்கள். அதே இந்திய அரசாங்கம் கூட நமக்கு 4000 வீடுகள் வழங்கி இருக்கும்போது பத்து வருடங்களாக இதனை கஷ்டப்பட்டு கட்டிக்கொண்டு இருக்கிறோம் காரணம் மக்களுக்கு காணி உரிமை இல்லாமையே. இதை எல்லோரும் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக கருத்து தெரிவித்தார்.
தகவல் – அமைச்சின் ஊடகப்பிரிவு