எரிபொருள் இறக்குமதி விநியோகம் மற்றும் விற்பனைக்கான விண்ணப்பங்க ளுக்கான பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அழைப்புக்கு பத்து நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக பெற்றோலியம் தொடர்பான நிபுணர் சிறில் சுதுவெல்ல தெரிவித்துள்ளார்.
கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 700 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தெரிவு செய்யப்பட்ட சில நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமையின் அடிப்படையில் எரிபொருளின் விலை, தரம், நுகர்வோரைப் பாதிக்கும் பிரச்சினைகள் மற்றும் எரிபொருள் விநியோகம் மற்றும் விற்பனையிலுள்ள ஏனைய விடயங்களை ஒழுங்குபடுத்துவதற்கு எரிபொருளையும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வர வேண்டும் எனவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இல்லை என்றால் எரிபொருள் விலை, தரம் போன்றவற்றை நிறுவனங்களின் விருப்பப்படி பேண முடியும் எனவும் பெற்றோலியம் தொடர்பான நிபுணர் சிறில் சுதுவெல்ல தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் விற்பனை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்னர் எரிபொருளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.