விறகு சேகரிக்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன், மரத்திலிருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
பொகவந்தலாவை, மாவலி வனப்பகுதிக்கு தனது தந்தையுடன் விறகுசேகரிக்கச்சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன் மரத்திலிருந்து தவறி விழுந்த நிலையில், பொகவந்தலாவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது இடைவழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவத்தில், பொகவந்தலாவ சென்.விஜயன்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சுரேந்திரகுமார் அபிஷாந்த் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் சடலம் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையிலிருந்து, டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொகவந்தலாவை நிருபர்