பொகவந்தலாவை இளைஞனை காவுகொண்ட மாணிக்கக்கல் சுரங்க குழி

0
664

சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழும் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சுரங்க குழிக்குள் மண்மேடு சரிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர் .

நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தெர்டர்பில் மேலும் தெரியவருவதாவது,
மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட 2ஏ இலக்க தேயிலை மலை பகுதியில சட்டவிரோதமாக மூவர் அடங்கிய குழு ஒன்று மாணிக்ககல் சுரங்க குழியில் மண்ணை அகழந்து கொண்டிருந்தே போது திடீரென மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இச்சம்பவத்தின் போது, இருவர் உயிர் தப்பியதோடு ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பொகவந்தலாவ டின்சின் பகுதியை சேர்ந்த 22வயதுடைய கனகரத்தினம் உபேந்திரன் என்ற இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கும் பொகவந்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்வம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு ஹட்டன் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு ஹட்டன் நீதிமன்ற நீதவான் தலைமையில் மரண விசாரணைகள் இடம் பெற்று, சடலம் அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் இருந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here