பொகவந்தலாவை, கெசல்கமுவ ஓயாவில் சுற்றிவளைப்பு SECTOR இயந்திரம் மீட்பு

0
294

பொகவந்தலாவை மானெலி வனப்பகுதியிலிருந்து காசல்ரி நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்திச்செல்லும் கெசல்கமுவ ஒயாவில்  சட்ட விரோத மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட  (Sector )மண் அகழ்வு இயந்திரம் ஒன்று கைப்பற்றப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

18 ஆம் திகதி இரவு பொலிஸாரினால் மேற்கொண்ட திடீர்  சுற்றிவளைப்பின் போதே மேற்படி இயந்திரம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொசல்கமுவ ஓயா ஆற்றுப்குதியில் இரவு வேலைகளில்  சட்ட விரோத மாணிக்ககல் அகழ்வு பணி இடம்பெற்றுவதாக அட்டன் பிராந்திய பொலிஸ் தலைமை அதிகாரி நிபுன் தெஹிகம விற்கு கிடைத்த தகவலையடுத்து மத்திய  மாகாண பொலிஸ் அத்தியட்சகர் லலித் பத்திநாயக வின் ஆலோசனைக்கமைய மேற்படி சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்தி பொகவந்தலாவை பொலிஸாரினால் மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையில் போது நீருக்கடியிலிருந்து மண்ணை உறிஞ்சி எடுக்கும் இயந்திரம், 40 லீட்டர் டீசல் என்பன கைப்பற்றப்பட்டது.
எனினும் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டோர் தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் அட்டன் நீதவான் நீதிமன்றில் முன்லைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here