பொகவந்தலாவை நகரத்தில் இயங்கிவரும் புடவை விற்பனை நிலையத்தில் முகாமையாளராக பணிபுரிந்து வந்த நபரை புடவை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவை கிவ்தோட்ட பொதுமக்கள் பொகவந்த பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இன்று வியாழக்கிழமை காலை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக குவிந்து எதிர்ப்பினை தெரிவித்த மக்கள் குறித்த விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வந்த நபர் குறித்த நிலையத்திற்கு தொழிலுக்கு சென்று நேற்று இரவு 12மணிவரை வீடு திரும்பவில்லையென 21.08.2024. புதன்கிழமை பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை உறவினர்கள் பதிவு செய்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ்; நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தததை அடுத்து தோட்டபொது மக்கள் குறித்த நபரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது குறித்த நபர் பொகவந்தலாவை டியன்சின் தோட்டப்பகுதியில் உள்ள காளியம்மன் ஆலயத்தில் இருந்து இன்று காலை உயிருடன் மீட்கப்பட்டு பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.
நபர் ஒருவர் காணவில்லையென தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்தும் பொலிஸார் எவ்வித நடவடிக்கையினையும் முன்னெடுக்கவில்லை இந்த விடயத்தில் சம்பந்தபட்டவர்களை பொலிஸார் உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியும் நீதியினை கோரியும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.