பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெம்பியன் கீழ் பிரிவு தோட்டத்தில் 03ஆம் இலக்க லயன் குடியிருப்பின் 11குடியிருப்புகளை கொண்ட தொடர் லயன் குடியிருப்புகளுக்கு அருகாமையில் பாரிய மண்சரிவு ஆபாயத்தின் காரணமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 22பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று திங்கட்;கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்த மேலும் ரெரியவருவதாவது,
சம்பவம் தொடர்பில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. மண்சரிவு ஆபாயம் காரணமாக தற்காலிமாக கெம்பியன் தோட்டத்தில் உள்ள உத்தியோகத்தர்களின் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதில் 06 ஆண்கள், 05பெண்கள், 11சிறுவர்கள் உள்ளடங்கலாக மொத்தம் 22 பேர் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தம் தொடர்பில் பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் ஊடாக அம்பகமுவ பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கிராம உத்தியோகத்தர் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த தோட்டத்தில் இதற்கு முன்பும் மண்சரிவு அபாயம் ஏற்பட்ட போதும் மலையக அரசியல் வாதிகள் பார்வையிட்டு சென்றார்களே தவிர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தகவல் -முத்து