பொதுத் தேர்தலை முன்னிட்டு : பொலிஸாரின் விசேட நடவடிக்கை மையம்

0
38

பொதுத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பை மேற்பார்வையிடுவதற்காக   பொலிஸார் விசேட நடவடிக்கை மையம் ஒன்றை நிறுவியுள்ளது.

இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, விசேட அதிரடிப்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படை உட்பட பல நிறுவனங்களின் முயற்சிகளை இந்த மையம் ஒருங்கிணைக்கும்.

மக்கள் தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் அல்லது முறைப்பாடுகள் இருப்பின் பின்வரும் இலங்கங்களுக்கு அழைப்பதன் மூலம் தகவல்களை வழங்கலாம்: 0112 027 149, 0112 013 244, 0112 242 11 11.

ட்ரோன்களைப் பயன்படுத்தி கண்காணிப்பு நடத்தப்படுவதோடு நாடு முழுவதும் 3,000 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸ் பேச்சாளர் பிரதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

சமூக ஊடகங்களின் செயல்பாடுகளும் கண்காணிக்க 602 அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 54 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையங்களை 24/7 கண்காணிக்க ட்ரோன் கண்காணிப்பு பயன்படுத்தப்படும்.

தேர்தலை சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதை உறுதி செய்வதற்காக கலகக் கட்டுப்பாட்டுக் குழுக்கள் மற்றும் வீதித் தடைகள் உள்ளிட்ட அதிகாரிகளை பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தல்துவா வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here