நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக அனைத்து பிரதேசங்களிலும் பொதுமக்கள் எரிபொருள் வரிசையில் பலநாட்கள் காத்திருப்பது வழமையான நிகழ்வாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுமக்களின் அத்துமீறல் சம்பவங்கள் பதிவாகியதையடுத்து, ஒழுங்குமுறைகளை ஏற்படுத்தும் வகையில் எரிபொருளை விநியோக நிலையங்களில் பொலிஸார் மற்றும் ஆயுதப்படைகளை ஈடுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், குருணாகல் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் இராணுவ அதிகாரி ஒருவர் பொதுமக்களை கால்களால் உதைக்கும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.