பொது மக்களின் பரிதாபகரமான நிலைய கருதி அம்பாறை மாவட்டத்தில் நாம் காலடி எடுத்து வைத்தோம் – ரிசாத் பதியுதீன்

0
110
அம்பாறை மாவட்டத்தில் இருந்த அரசியல் வெறுமையை அரசியல் அதிகாரம் இருந்தும் பொது மக்களின் பரிதாபகரமான நிலைய கருத்திற் கொண்டு தான் பொது மக்களுக்கு விமோசனத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அம்பாறை மாவட்டத்தில் நாம் காலடி எடுத்து வைத்தோமேயொழிய வேறு பாராளுமன்ற உறுப்பினர்களை இல்லாமல் ஆக்குவதற்கோ அல்லது இன்னொரு கட்சியை அழிக்க வேண்டும் என்பதற்கு வந்தவர்கள் நாம் அல்ல என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
 முன்னாள் உயர்கல்விப் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் புதல்வர் றிஸ்லி முஸ்தபா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துகொள்ளும் சிறப்பு விழா றிஸ்லி முஸ்தபா கல்வித் திட்டக்குழுவினரின் ஏற்பாட்டில்,தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பம்,வர்த்தக முகாமைத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளரும் றிஸ்லி முஸ்தபா கல்வித் திட்டத்தின் பிரதித்தலைவர் ஏ.எல்.எம். ஐயூப்கானின் தலைமையில் மாளிகைக்காடு பாவா ரோயலி வரவேற்பு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை(31)
இடம்பெற்ற நிகழ்வில்,கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
 அம்பாரை மாவட்டத்தில் கட்சிகள் இருந்தது அமைச்சர்களாக அல்லது இராஜாங்க அமைச்சர்களாக கட்சியின் தலைமை பலம் பொறுந்திய நிலையில் இருந்தும் மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் மக்களின் பிரசசினைகள் தீர்கப்படாமல் தேர்தல் மேடைகளில் பேசு பொருளாக இருந்ததே ஒழிய எந்தவொரு தீர்வினை காணும் எந்தவொரு இதய சுத்தியுடனான வேலைத் திட்டங்களை நாம் காணவில்லை அதனால் தான் இந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை களம் கண்டு ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு என நாற் பத்தி நாலாயிரத்துக்கு மேல் வாக்குகளை பொது மக்கள் எம்மை நம்பி வழங்கி பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்களை உருவாக்கி உள்ளனர். எதிர்வரும் எந்த தேர்தல் ஆயினும் இந்த சமுகத்தின் தேவைகளை அறிந்து அதற்கான வேலைத் திட்டங்களை நிறைவேற்றுபவர்களைத் தான் கட்சி வேட்பாளர்களாக நிறுத்தி அவர்களில் யார் வென்றாலும் வென்றவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்ற உறுதிமொழியுடன் இருக்கும் வேட்பாளர் பட்டியலை கட்சி தாயார் செய்ய எண்ணியுள்ளது என்ற செய்தியை தெரிவிக்கிறேன் .
 ஆரம்பத்தில் றிஸ்லி முஸ்தபா கட்சியுடன் இணைந்து கொள்வதற்கு முன்னர் எமது மாவட்ட அணியுடன் பேசினார்,பொதுவாக ஒருவர் கட்சிக்கு வருகிறார் என்றால் அவருக்கான வரவேற்பு குறைவாக இருக்கும் ஆனால் எமது கட்சியின் அனைவரும் றிஸ்லி முஸ்தபாவின் வருகையை ஆதரித்தனர் றிஸ்லி முஸ்தபாவுக்கான அங்கீகாரத்தினை கட்சி வழங்கும் அவர் என்றும் சமூக சிந்தனையுடன் மக்களின் எதிர்கால நலனுக்காக பயணிக்க வேண்டும் என்றார்.
இந் நிகழ்வில்,முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்,கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான கே.எம்.ஏ. றசாக்(ஜவாத்), ஐ.எல்.எம்.மாஹிர்,எம்.எஸ்.சுபைர்,நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம்.அஷ்ரப் தாஹிர்,அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்சில்,மற்றும் உள்ளிட்ட கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களும் கட்சியின் ஆதரவாளர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்வின் அங்கமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞர் காரியாலயம் கல்முனையில் உள்ள றிஸ்லி முஸ்தபாவின் அலுவலகத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
 ரிஸ்லி முஸ்தபா அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் பல்வேறு வகையான சமூக நல உதவிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 (எம்.என்.எம்.அப்ராஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here