வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொம்மையைத் திருமணம் செய்து கொண்ட பெண், தனக்கு குழந்தை பிறந்திருப்பதாகக் கூறி, விருந்து வைத்து கொண்டாடிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில்தான் இந்த வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் மெய்ரிவோன் ரோச்சா மோரேஸ் ஆகும். 37 வயதான அப்பெண்ணுக்கு நடனக் கூட்டாளி இல்லை என்பதால், அவரது தாயார் வீட்டிலேயே பழைய துணிகளைக் கொண்டு மார்செலோ என்ற பொம்மையை செய்து கொடுத்தார்.
காலப்போக்கில் அந்த பொம்மையுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்த அப்பெண், ஒரு கட்டத்தில் அதனையே திருமணமும் செய்து கொள்ள முடிவெடுத்தார். ஆடம்பரத் திருமணம் மற்ற திருமணங்களைப் போலவே ஆடம்பரமாக தன் பொம்மைக் காதலனைக் கரம் பிடித்தார் ரோச்சா.
மணமகள் போன்று ரோச்சா ஆடை அணிந்திருக்க, மார்செலோவுக்கு மணமகன் மாதிரி உடை உடுத்தப்பட்டது. சுமார் 250 பேர் இந்தத் திருமண விழாவில் கலந்து கொண்டு, புதுமணத் தம்பதிகளை வாழ்த்தினர். காதல் கணவர் தனது கணவரின் வருகை, வாழ்க்கையை முழுமையடையச் செய்ததாகக் கூறி, திருமண வாழ்க்கை சிறப்பாகச் சென்று கொண்டிருப்பதாக சமூகவலைதளத்தில் அவ்வப்போது பதிவுகளை அவர் வெளியிட்டு வந்தார்.
மேலும் தனது பொம்மைக் கணவர் ஒருபோதும் சண்டையிடுவதில்லை என்றும், தன்னை புரிந்துகொள்வதால் தான் எப்போதும் விரும்பும் மனிதனாக தனது கணவர் இருப்பதாகவும் அவர் கூறி வந்தார். கர்ப்பிணி நண்பர்களுடன் பார்ட்டிக்கு செல்லும்போது, அந்த பொம்மைக் கணவருக்கும் அழகாக ஆடை அணிந்து அழைத்துச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் ரோச்சா.
இந்நிலையில் தனது அண்மைய புகைப்படங்களில் காதல் கணவருடன், கர்ப்பமாக இருப்பது போன்ற தோற்றத்தில் ரோச்சா காணப்பட்டார். பெருத்த வயிறுடன் கர்ப்பிணி போன்ற தோற்றத்தில் அவரது புகைப்படங்கள் இருந்தன. குழந்தையுடன் போட்டோ அதன் தொடர்ச்சியாக, தற்போது தனக்கும், தன் காதல் கணவருக்கும் இப்போது ஒரு குழந்தை பிறந்திருப்பதாகக் கூறி சிலப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரோச்சா. அதில் அவர் மருத்துவமனையில் கையில் குழந்தையைப் போன்று ஒரு பொம்மையை ஏந்தியவாறு உள்ளார்.
கூடவே மருத்துவ ஊழியர்கள் போன்ற உடையில் சிலர் அருகில் இருக்கின்றனர். நேரலை நிஜக் குழந்தையைப் போன்றே அந்தப் பொம்மையைத் தொட்டிலில் போட்டு, விதவிதமான புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். அந்த பொம்மை தான் தங்களது குழந்தை எனவும், ‘எங்கள் குடும்பத்திற்கு புதிய வரவு’ என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தனது குழந்தையின் வரவை சுமார் 200 பேருடன் விழா எடுத்துக் கொண்டாடியுள்ளார் ரோச்சா. பதிலடி இந்த நிகழ்ச்சியை சமூகவலைதளப் பக்கம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்துள்ளார் ரோச்சா.