மலையகத்தின் இளம் ஆளுமைகளில் ஒருவரும், சமூக செயற்பாட்டாளருமான பொறியியலாளர் பிரஜீவன் சுரேஷ்குமார் அவர்கள், இன்றைய தினம் ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதியரசர் முன்னிலையில் அகில இலங்கைக்கான சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முதுத் தத்துவமாணி (M.Phil) பட்டதாரி ஆவார்.
ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பிரதித் தலைவராகவும், ஜனாதிபதி செயலகத்தில் மலையக அபிவிருத்திக்கான இணைக்குழு உறுப்பினராகவும் செயற்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு விரிவுரையாளராகவும், Plexus International நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் செயற்படுகிறார்.